பட்டாசு ஆலை விபத்து — 2 பேர் பலி

கனஞ்சாம்பட்டியில் மாயக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையை, கந்தசாமி என்பவர் நடத்தி வருகிறார். இங்கு, சுமார் 70க்கும் மேற்பட்ட அறைகளில் 150க்கும் மேற்பட்டோர் பேன்சி ரக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பணியில் ஈடுபட்டிருந்தபோது மூலப்பொருள் உராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், எட்டுக்கும் அதிகமான அறைகள் தரைமட்டமாகின. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த கோர விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

YouTube video player

Exit mobile version