கொல்லிமலை வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 200 ஏக்கர் விவசாய பயிர்கள் தீயில் கருகி சேதமடைந்தன. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இங்குள்ள வனப்பகுதியில் மூங்கில், உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. கடந்த சில வாரங்களாக பகல் நேரங்களில் வெப்பம் அதிக அளவில் காணப்படுவதோடு காற்று வீசி வருவதால், மூங்கில் மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் திடீரென தீ பிடித்துள்ளதாக தெரிகிறது.
வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ கொல்லிமலை அடிவாரம் பகுதியிலும் பரவியது. இதில் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, பாக்கு போன்ற , மரங்கள் தீயில் கருகின. தகவலின் பேரில் நாமக்கல் மற்றும் இராசிபுரத்தில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்துவருகின்றனர்.