சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள கார் பழுதுபார்க்கும் கடையில் தீ விபத்து

சென்னை ஜெ.ஜெ.நகரில் கார் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் எரிந்து சேதமடைந்தன.

சென்னை ஜெ.ஜெ.நகரில் கோல்டன் ஜார்ச் ரத்தினம் சாலையில் இரும்பு தகரத்தினால் ஆன நான்கு கடைகள் அமைந்துள்ளன. தனியாருக்கு சொந்தமான இந்த கடையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 11 கார்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version