சிவகாசி அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தீவிபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து, மூலப்பொருட்கள் சேகரிக்கும் மூன்று அறைகள் தரைமட்டமானது.

சிவகாசி அருகே வெற்றிலை ஊரணியில் முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான தமிழ்நாடு பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் சேகரிக்கும் அறையில் நள்ளிரவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மூன்று அறைகள் தரைமட்டமாகின.

அறையின் வெப்பநிலை அதிகரித்ததால் வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Exit mobile version