ஈரோடு மாவட்டம் மல்லன்குழி கிராமத்தில் குடிசை வீட்டில் தீ பிடித்ததில் உறங்கிக் கொண்டிருந்த இருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் மல்லன்குழி கிராமத்தில் ராஜம்மா மற்றும் அவரது மகள் கீதா ஆகியோர் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் திடீரென குடிசை வீட்டில் தீ பிடித்தது . இதில் இருவரும் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது கொலையா அல்லது தற்கொலையா அல்லது விபத்தா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.