பரமக்குடியில் சிட்கோ தொழில் மையத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் தீ விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள சிட்கோ தொழில் மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் உள்ள சிட்கோ தொழில் மையத்தில், மின்சார வாரியத்திற்கு தேவையாக கனரக உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உட்பட, 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு இயங்கி வரும் பழைய டயர்களை அரவை செய்து விற்பனை செய்யும் நிறுவனத்தில், திடீரென தீ பற்றியது. சிறிது நேரத்தில் மளமளவென எரிந்த தீ அருகிலுள்ள நிறுவனங்களுக்கும் பரவியது. தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version