ராசிபுரத்தில், தனியார் விசைத்தறி கூடம், தீப்பிடித்ததில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 விசைத்தறி இயந்திரங்கள் எரிந்து சேதமானது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதிகளில் அதிக அளவில் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளபிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த சீனி என்பருக்கு சொந்தமான 4 விசைத்தறி கூடங்களில், தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 விசைதறி இயந்திரங்கள் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து, தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.