கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தீ விபத்து

சென்னை கோயம்பேட்டில் உள்ள குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் காணப்பட்டது.

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு அடர்ந்த காய்ந்த புற்கள், மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் திடீரென்று அப்பகுதியில் உள்ள புற்கள் தீப்பிடித்து எரிந்தன. மளமளவென பரவிய தீயால் கடும் புகை மூட்டம் எழுந்தது. தகவலின் பேரில், அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது. சுமார் 20 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் கடும் வெயிலால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version