திருத்தணி அருகே தனியார் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள் உள்ளிட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே புதூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில், அதிகாலை 2 மணியளவில் தொழிற்சாலையின் மோல்டிங் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து மளமளவென ஆலை முழுவதும் பரவியது.
தகலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். தீ விபத்து ஏற்பட்டதும் இரவுநேர பணியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தீ விபத்தில் இயந்திரங்கள் உள்ளிட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.