மளிகை கடையில் மின் கசிவினால் தீ விபத்து

கோவை மாவட்டம் வால்பாறையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு கடை, 2 வீடுகள் வீடுகள் முற்றிலும் நாசமாகின.

வால்பாறையை அடுத்துள்ள ஐயற்பாடி எஸ்டேட் பகுதியில் லத்திப் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். இவரது கடையில் மின் கசிவினால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ அருகில் உள்ள சின்னப்பன், ஜோனி ஆகியோர் வீடுகளையும் சூழ்ந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்த போதும் லத்தீப்பின் கடை மற்றும் இரண்டு வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமாயின. தீ விபத்தின் போது வீடுகளில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.

Exit mobile version