திருநெல்வேலி தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்
திருநெல்வேலி சங்கரன்கோயிலை அடுத்த வரகனூரில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பலியாகினர். இதையடுத்து ஆலை செயல்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், ஆலையில் சிதறிக் கிடந்த பட்டாசுகள் மீண்டும் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிவகாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். சிதறி கிடக்கும் பட்டாசுகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.