கொடுமுடி அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் நார் தீயில் எரிந்து சாம்பலானது. கொடுமுடி அருகே தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் மலைபோல் கொட்டி வைக்கப்பட்டிருந்த தேங்காய் நாரின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்ற தொடங்கியது. இந்த தீயானது, மளமளவென பரவி தொழிற்சாலை முழுவதும் சூழ்ந்தது.

தொழிற்சாலை ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்ததோடு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பலமணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் நார்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.

Exit mobile version