தொழிற்கல்விப் பயிற்சி வழங்க பின்லாந்து கல்வியாளர்கள் தமிழகம் வருகை: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்களுக்குத் தொழிற்கல்விப் பயிற்சி வழங்க பின்லாந்து கல்வியாளர்கள் விரைவில் தமிழகம் வர உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பின்லாந்து நாட்டிற்கு ஒருவாரக் காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர் செங்கோட்டையன் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பின்லாந்தில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் போதே மாணவர்களுக்குத் தொழிற்கல்வி பயிற்றுவிக்கப் படுவதாகவும், இதனால் 18 வயதிலேயே பெற்றோர் துணையின்றி வாழ்வை மேம்படுத்திக் கொள்ள முடிவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். புதிதாக வரவுள்ள கல்வி முறையில் பள்ளி மாணவர்களுக்கு தொழிற் கல்வி வழங்குவதற்கான பணிகளை தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

Exit mobile version