சென்னையில் கொசு உருவாக காரணமாக இருந்த தனியார் கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து 7 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக சுகாதாரப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.இதனிடையே கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் தனியார் கட்டுமான இடங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை முழுவதும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட இந்த ஆய்வில் முறையாக பராமரிக்காமல் கொசு உருவாக காரணமாக இருந்ததாக, 7 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.