நீலகிரியில் ரயில் தண்டவாளங்களில் செல்பி எடுக்கும் பயணிகளுக்கு அபராதம்

நீலகிரி மலை ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களில் செல்பி எடுக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை உள்ள மலைப்பாதையில் ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். நீராவி இன்ஜினில் தண்ணீர் நிரப்ப வனப்பகுதியில் ரயில் நிறுத்தப்படும் போது தண்டவாளங்களில் நின்று புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணிகள் முயற்சி மேற்கொள்வதால் அசம்பாவிதம் சம்பவம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மலை ரயிலில் ஜன்னல் வழியாக வெளியே வந்து செல்பி எடுக்கும் முயன்றாலோ, மலை ரயில் தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுக்க முயற்சி மேற்கொண்டால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்தது. இந்த விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Exit mobile version