உல்லாச உலகம் பகுதியில் இன்று Turkmenistan நாட்டைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்!

உல்லாச உலகம் பகுதியில் இன்று Turkmenistan நாட்டைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்..

Turkmenistan என்பது மத்திய ஆசியாவில் இருக்கும் ஒரு அழகான தேசம்.. நாட்டின் மக்கள் தொகை வெறும் 60 லட்சம் தான்… அவர்களில் 93 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள். 6 சதவிகிகிதம் பேர் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர்.. அதே நேரத்தில் நாட்டின் பரப்பு 4 லட்சத்து 91 ஆயிரம் சதுர கி.மீ.ஆகும்.. ஆசியாவிலேயே மக்கள் தொகை அடர்த்தி குறைந்த தேசமாக துர்க்மேனிஸ்தான் விளங்குகிறது. பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடாக விளங்கும் Turkmenistan, சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து வந்த தேசமாகும்.

Turkmenistan ல் மனித உரிமை மீறல்கள் அதிக அளவில் நடப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளன.. அந்நாட்டவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப கடுமையாக கட்டுப்பாடுகளை விதிப்பதாக கூறப்படுகிறது… உள்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை விதித்து வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் அடக்குமுறையில் ஈடுபடுவதாகவும் அந்நாட்டரசு மீது தொடர் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

அதே போல பத்திரிகை சுதந்திரமும் நசுக்கப்படுவதாக கூறப்படுகிறது.. Turkmenistan ல் , தனியார் தொலைக்காட்சிகளுக்கு அனுமதி இல்லை.. அரசு தொலைக்காட்சிகள் மட்டுமே இருக்கின்றன..

Caspian கடல் எனப்படும் மிகப்பெரிய ஏரி இந்நாட்டின் எல்லையில் இருக்கிறது.. உலகின் மிகப்பெரிய ஏரி அல்லது நிலங்களால் சூழப்பட்ட கடல் என இதை அழைக்கிறார்கள்.. கடலில் இருப்பதை விட குறைவான அளவு, இந்த ஏரியின் நீரில் உப்புத்தன்மையும் இருக்கிறது.. இதில் கப்பல்களை இயக்கும் Turkmenistan, கடற்படையையும் நடத்தி வருகிறது. எண்ணெய் வளம் நிறைந்து காணப்படுவதால் இந்நாடு மிக மிக வேகமாக வளரும் நாடாக உள்ளது.

இந்நாட்டில் பெரும்பாலும் பருத்தி பயிரிடப்படுகிறது.. பருத்தி உற்பத்தியில் உலகிலேயே 6 ம் இடம் வகிக்கும் Turkmenistan,
Russia, Iran, South Korea, United Kingdom, China, Indonesia, Turkey, Ukraine, Singapore உள்ளிட்ட நாடுகளுக்கு பருத்தியை ஏற்றுமதி செய்கிறது.

Door to Hell அல்லது Gates of Hell என அழைக்கப்படும் இப்பகுதி Turkmenistan ல் இருக்கிறது.. 1971 ல் உருவான இந்த இயற்கை எரிவாயு பகுதி இன்னும் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கிறது.. உள்ளிருந்து வெளியேறும் எரிவாயு எரிந்தபடி இருப்பதால், சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது.. அச்சமின்றி அதன் மீது சாகசம் செய்வோரையும் பார்க்க முடிகிறது.

உலகிலேயே மிக மிக குறைந்த அளவில் சுற்றுலா பயணிகள் செல்லும் தேசம் இதுவாகும்.. 2018 ம் ஆண்டு வெறும் 13 ஆயிரம் பேர் தான் இந்நாட்டிற்கு சுற்றுலா சென்றனர். பெரும்பாலான APP கள் இந்நாட்டில் இயங்காது.. அந்நாட்டிற்கு சென்றால், உங்கள் இ மெயில் கூட ஓபன் ஆகாது.. அந்நாட்டில் வெள்ளையை தவிர மற்ற நிற கார்களை மக்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளார் அதிபர்.. குறிப்பாக கருப்பு நிற கார் என்றால் அவருக்கு பிடிக்கவே பிடிக்காதாம்.. துர்க்மேனிஸ்தானில் எங்கு பார்த்தாலும் வெள்ளை நிற மார்பிளால் ஆன கட்டடங்களே நிறைந்திருக்கும்.. வெள்ளை நிற மார்பிள் கற்களால் கட்டப்பட்ட கட்டங்கள் நிறைந்த தேசம் என்ற பிரிவில், கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது துர்க்மேனிஸ்தான்..

Exit mobile version