2020-2021ஆம் நிதியாண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் என தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையின் அடுத்தக் கூட்டத்தை பிப்ரவரி 14ம் தேதி காலை 10 மணிக்கு பேரவைத் தலைவர் தனபால் கூட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 2020-2021 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை பேரவைக்கு அளிக்க வேண்டுமென்று ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 14ம் தேதி காலை 10 மணிக்கு நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பிப்ரவரி 14ம் தேதி தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை பிப்ரவரி 14ம் தேதி காலை 10 மணிக்கு பேரவை தலைவர் தனபால் கூட்டியுள்ளார்
2020-2021ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை பேரவைக்கு அளிக்க வேண்டுமென்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்
அதன்படி, பிப்ரவரி 14ம் தேதி காலை 10 மணிக்கு நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது
நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும்,நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 14ம் தேதி தாக்கல் செய்கிறார்