பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், திமுக அரசு, வரிகளை உயர்த்தி, சுமையை தலையில் ஏற்றிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, 3 மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குதல், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் கண்டுகொள்ளாத திமுக அரசு மீது பொது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அண்மையில் திமுக அரசு, வெள்ளை அறிக்கை வெளியிட்டு வருவாய் இழப்பை காரணம் காட்டி வரிகளை உயர்த்த திட்டம் தீட்டுகிறதா? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிலையில், இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை திமுக அரசு இன்று தாக்கல் செய்கிறது. வரிகளை உயர்த்தி, அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமோ..?, தலையில் சுமைகளை ஏற்றிவிடுமோ..? என்ற அச்சத்தில் உள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.