இறுதிக்கட்ட முக்கிய அறிவிப்புகளை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார்..

பிரதமர் மோடி கடந்த 12ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதித் தொகுப்பை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “சுயசார்பு இந்தியா” என்ற பெயரில் 4 கட்டங்களாக பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில்துறை, விவசாயம், பாதுகாப்பு, நிலக்கரி, மின்சாரம் உள்ளிட்ட துறைகளுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது, 5-வது மற்றும் இறுதிக்கட்டமாக பல்வேறு துறைகளில் முக்கிய அறிவிப்புளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version