மகளிர் சுய உதவிக்குழு கடனை கேட்டு நிதி நிறுவனங்கள் மிரட்டல்

ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் மகளிர் சுய உதவிக்குழு கடனை கேட்டு நிதி நிறுவனங்கள் மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை எம்.கே.புரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் பெற்றுள்ளனர். தற்போது அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக வருமானத்தை இழந்து தவிக்கும் அவர்கள், கடன் தொகையை கட்டமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இம்மாதம் நிலுவை தொகையை செலுத்தும்படி, நிதி நிறுவனங்களின் ஊழியர்கள் மிரட்டல் தொனியோடு கட்டாயப்படுத்துவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வருமானத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version