கடைசியாக எனது மகனுடன் தொலைப்பேசியில் பேசினேன் : வீரரின் தந்தை உருக்கம்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் அரியலூரை சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

எனது மகனுடன் கடைசியாக தொலைப்பேசியில் பேசினேன் : தந்தை உருக்கம்

கடைசியாக தனது மகனுடன் நேற்றுமுன் தினம் தொலைப்பேசியில் பேசியதாக காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த கோவில்பட்டியைச் சேர்ந்த சுப்ரமணியனின் தந்தை தெரிவித்துள்ளார். “எங்கள் குடும்பம் அவரை தான் சார்ந்து இருந்தது. இன்று அவன் எங்களிடம் இல்லை என்பது சொல்ல முடியாத வேதனை” சுப்ரமணியனின் தந்தை உருக்கமாக கூறினார்.

Exit mobile version