தமிழ்நாடு முழுவதும் 9 மாதங்களுக்கு பிறகு இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கின.

தமிழ்நாடு முழுவதும் 9 மாதங்களுக்கு பிறகு இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கின.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன், தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகள் இன்று முதல் மீண்டும் தொடங்கின. சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி உட்பட அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன. மாணவிகள் அனைவரும் உற்சாகத்துடன் கல்லூரிக்கு சென்றனர்.

 

விழுப்புரத்தில் உள்ள, அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியின் இறுதியாண்டு வகுப்புகள் மட்டும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று திறக்கப்பட்டன. பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைவரும் முகக் கவசங்கள் அணிந்து கல்லூரிக்கு சென்றனர்.

 

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு. சேலத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னர், வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

 

ஈரோடு மாவட்டத்தில் 9 மாதங்களுக்குப் பிறகு, அனைத்து கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட்டன. இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவிகள், பேராசிரியர்களுக்கு, கல்லூரி நிர்வாகம் சார்பில் போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தியாகராசர் கலைக் கல்லூரியில், இறுதியாண்டு வகுப்புகள் இன்று தொடங்கின. 9 மாதங்களுக்குப் பிறகு கல்லூரி திறக்கப்படுவதால், கிருமி நாசினி மூலம் வகுப்பறைகள் உட்பட வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டன. போதிய பாதுகாப்பு இடைவெளிகளுடன் மாணவர்களுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள, தூய யோவான் கல்லூரி, கடந்த 9 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கல்லூரி திறக்கப்பட்டதால், மாணவர்கள் உற்சாகத்துடன் கல்லூரிக்குச் சென்றனர். பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பின்னர் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Exit mobile version