ஜனவரி 15ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

2021ஆம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தமிழக தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரைவு வாக்காளர் பட்டியல் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், நவம்பர் 16ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ம் தேதி முதல், டிசம்பர் 15ம் தேதிக்குள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்துகொள்ள, வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், 2021ம் ஆம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது பூர்த்தியாவோர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள, வாக்காளர்கள், தாலுகா அலுவலகத்தை எளிதில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி, தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Exit mobile version