தமிழில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிக்கும், இசையமைப்பாளர் அனிருத்துக்கும் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தர்பார்’. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வருகிற ஜனவரி 9ம் தேதி வெளியாக இருக்கிறது. தர்பார் படத்தில் 450க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இதில் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் இருந்து 5 பேருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாக இசையமைப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேட்டியளித்த திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா , பேட்ட படத்தின் போது இசையமைப்பாளர் அனிருத்திடம் சங்கத்தில் இருக்கும் இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். அப்போது சம்மதம் தெரிவித்த அனிருத், தர்பார் படத்திலும் சங்க கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தரவில்லை என குற்றஞ்சாட்டினார். . இந்த விஷயம் ரஜினிக்கும் தெரியும் என தெரிவித்த தீனா, ரஜினி மற்றும் அனிருத்துக்கு இசை கலைஞர்கள் சங்கம் சார்பாக கண்டனத்தை தெரிவிப்பதாக கூறினார்.