திரைப்படப் பைனான்சியர் அன்புச் செழியன் வீடுகளில் வருமானவரி சோதனை

திரைப்படப் பைனான்சியர் அன்புச் செழியன் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத 65 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம், திரைப்பட பைனான்சியர் அன்பு செழியன், மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ஏஜிஎஸ் நிறுவனத்தில் 24 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதேபோல திரைப்படப் பைனான்சியர் அன்புச் செழியன் வீடுகளில் சென்னையிலும், மதுரையிலும் நடத்தப்பட்ட சோதனையில் 65 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையிலுள்ள அன்புச் செழியன் வீட்டில்  50 கோடி ரூபாயும், மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள வீட்டில் 15 கோடி ரூபாயும் என வருமான வரித்துறையினர் கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிகிறது.

Exit mobile version