நீலகிரி மாவட்டத்தில், வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்களிடம், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலை வைப்பதாகக் கூறி, திமுக மாவட்ட செயலாளர் முபாரக் மற்றும் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், 10 ஆயிரம் ரூபாய் வசூலித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக தலைமை கழகம் வெளியிட்டது. இதனிடையே, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அனைவரிடமும், நீலகிரி மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் முபாரக் மற்றும் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் ஆகியோர், வேட்பாளர்கள் அனைவரிடமும் 10 ஆயிரம் ரூபாய் வசூல் செய்ததாக திமுகவினரே அதிருப்தி தெரிவித்துள்ளனர். உதகையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலை வைப்பதாகக் கூறி அந்த பணம் வசூலிக்கப்பட்டதாக மாவட்ட திமுகவினர் தெரிவித்தனர். மேலும், இவர்கள் இருவரும், இதேபோல் பலரிடம் பணமோசடி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.