திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ததற்கு எதிராக மனு

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை ரத்து செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவரும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி உடல்நல குறைவால் காலமானார். இதனையடுத்து திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் திருவாரூரில் தற்போது இடைத்தேர்தலை நடத்த கூடாது என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கைவிடுத்தன. இதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையமும் இடைத்தேர்தலை ரத்து செய்தது. இந்தநிலையில் திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து தாமோதரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் தலைமை தேர்தல் ஆணையருக்கு இல்லை என சுட்டிக் காட்டியிருக்கும் மனுத்தாரர், தேர்தலை ரத்து செய்வது குறித்து மத்திய அரசுடன் ஆலோசித்து ஒப்புதல் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Exit mobile version