ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் வாக்குச் சாவடிக்குள் புகுந்து ஜன சேனா கட்சியினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். தங்கள் கட்சி வேட்பாளர் பெயரில் எழுத்து பிழை இருப்பதாக கூறி ரகளையில் ஈடுபட்ட அவர்கள், வாக்குப்பதிவு இயந்திரத்தை போட்டு உடைத்தனர். இதனால், வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜன சேனா கட்சியின் வேட்பாளர் மதுசூதன் குப்தா கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, கடப்பா மாவட்டத்தில் உள்ள ஜம்மல மடுகு சட்டமன்ற தொகுதியில் ஆளும் கட்சியான தெலுங்குதேச கட்சியினருக்கும் எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கு மோதல் வெடித்தது. ஒருவர் மீது ஒருவர் கல்லெறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். வாக்குச் சாவடிகளுக்கு வந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் பலர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி ரகளையில் ஈடுபட்டவர்கள் விரட்டினர்.