தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தோழமை கட்சிகளாக உள்ள கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும், கேரளாவில் மோதலில் ஈடுபட்ட சம்பவம், அரசியல் அரங்கில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னனியினரும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியினரும் மோதலில் ஈடுபட்டனர். காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர், காங்கிரஸ் தலைவர் ஏ.கே.ஆண்டனியுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள் பிரசாரத்தை தடுத்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் காங்கிரஸ் தலைவர் ஏ.கே.ஆண்டனி பிரசாரத்தை முடித்துக்கொண்டு திரும்பினார். இதனைத் தொடர்ந்து இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்.