அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையேயான போராட்டம் என்று அதிமுக கொறடா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன், மக்களவை உறுப்பினர் சந்திரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமஜெயலிங்கம், இளமை தமிழ்ச்செல்வன் ஆகியோர் க.பரமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் வாக்கு சேகரித்தனர். அப்போது பேசிய கொறடா ராஜேந்திரன், அதிமுக வேட்பாளராக போட்டியிடும் செந்தில்நாதன் வெற்றிபெற்றால், குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பார் என்று குறிப்பிட்டார்.