கூட்டுறவு சங்கத்தில் ஐந்தரை கோடி ரூபாய் மோசடி

கூட்டுறவு சங்கத்தில் ஐந்தரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராமநாதபுரம் திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது விவசாயிகள் புகார் கொடுத்துள்ளனர்.

தமிழக காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரனை அவரது அலுவலகத்தில் சந்தித்த ராமநாதபுரத்தை சேர்ந்த விவசாயிகள், இப்புகார் மனுவை அளித்துள்ளனர். அதில் ராமநாதபுர மாவட்ட திமுக பொருப்பாளர் முத்துராமலிங்கம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கூட்டுறவு சங்கத் தலைவர் கோட்டைக்கண்ணன், செயலாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் மீது மோசடி புகார் அளித்துள்ளனர். 2013 ஆம் ஆண்டு முதல் 2018 வரையிலான காலத்தில் காவடிப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் போலி ஆவணம் தயாரித்து ஐந்தரை கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version