உலக கால்பந்து தரவரிசையில், இந்திய அணி 97 வது இடம், ஆசிய அளவில், 15 வது இடம்

ஃபிஃபா உலக கால்பந்து தரவரிசையில், இந்திய அணி 97 வது இடத்தில் நீடிக்கிறது. உலக கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால் பந்து கூட்டமைப்பான ஃபிஃபா வெளியிட்டுள்ளது. இதில், பெல்ஜியம் அணி ஆயிரத்து 727 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது.

ஆயிரத்து 726 புள்ளிகளுடன் நடப்பு சாம்பியன் ஃபிரான்ஸ் 2 வது இடத்திலும், ஆயிரத்து 676 புள்ளிகளுடன் பிரேசில் 3 வது இடத்திலும் உள்ளன. இந்திய காலபந்து அணி ஆயிரத்து 240 புள்ளிகளுடன் 97 வது இடத்தில் நீடிக்கிறது. ஆசிய அளவில் இந்தியா 15 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version