உலக கால்பந்து தரவரிசை: 97-வது இடத்தில் இந்திய அணி

பிபா உலக கால்பந்து தரவரிசையில், இந்திய அணி 97-வது இடத்தில் நீடிக்கிறது.

உலக கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா வெளியிட்டுள்ளது. இதில், பெல்ஜியம் அணி ஆயிரத்து 727 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. ஆயிரத்து 726 புள்ளிகளுடன் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் 2-வது இடத்திலும், ஆயிரத்து 676 புள்ளிகளுடன் பிரேசில் 3-வது இடத்திலும் உள்ளன.

இந்திய கால்பந்து அணி ஆயிரத்து 240 புள்ளிகளுடன் 97-வது இடத்தில் நீடிக்கிறது. ஆசிய அளவில் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version