காரைக்குடி அருகே காய்ச்சல், சளிக்கு மருந்தாக பயன்படும் கண்மாய் நண்டுகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதால் அப்பகுதி இளைஞர்கள் நண்டு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கல்லுப்பட்டியில் காய்ச்சல், சளி தொந்தரவுக்கு இயற்கை முறையில் பக்க விளைவு இல்லாத மருந்தாக நண்டை உணவாக பயன்படுத்தி வருகின்றனர். நண்டை இடித்து ரசம் வைத்து சாப்பிட்டால் காய்ச்சல் சளி தொந்தரவு விரைவில் குணமடையும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், மண் புழுவை உண்டு வாழும் இந்த வகை நண்டுகளால், உடல் நலனுக்கு எந்த தீங்கும் கிடையாது என்பதால், கண்மாயகளில் உயிருடன் உள்ள நண்டுகளை பிடித்து கிராம மக்கள் உணவாக பயன்படுத்துகின்றனர். இவற்றை வாங்க நகரப் பகுதி மக்களும் கிராமங்களுக்கு படையெடுக்கின்றனர். இதனால், கிராம இளைஞர்கள் கண்மாய் ஓரப் பகுதிகளில் வாழும் நண்டுகளை உயிருடன் பிடித்து அவற்றை விற்பனை செய்து பொருள் ஈட்டி வருகின்றனர்.