வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் முறை சென்னையில் தொடங்கியது!

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் முறை சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளது.

 சென்னையில் கொரோனா நோய் பரவல் அதிகரித்துள்ளதால், வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை நடத்தும் முறையை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க, 200 வார்டுகளிலும் தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.

வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்துவதுடன், 200 வார்டுகளிலும் காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக காய்ச்சல் முகாம்களை நடத்தவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Exit mobile version