மூணாறு அருகே, வட்டவடை பகுதியில் எருது விடும் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான இடுக்கி மாவட்டம், மூணாறு அருகில் உள்ள வட்டவடைப்பகுதியில் எருதுவிடும் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், மதுரையில் இருந்து குடிபெயர்ந்த தமிழ் மக்களால் ஆண்டுதோறும் இவ்விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.
வட்டவடையில் வீடுகளில் இருந்து மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்ட காளைகள், தன்னிகரை என்ற இடம் வரை ஓடவிடப்பட்டன. காளைகளை ஓடவிடும் காட்சி காண்போருக்கு விருந்தாக அமைந்தது. இந்நிகழ்வை நூற்றுக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.