சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் தேரோட்ட விழா

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்ட விழாவில் 90 ஆயிரம் தேங்காய்களை உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி பெரு விழா கடந்த 12 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது . ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியில் ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் திருத்தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து மாலை 5 மணி அளவில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேரானது நான்கு ரத வீதிகளில் உலா வந்து நிலையை வந்து அடைந்தது.

Exit mobile version