ராமநாதபுரம் உள்ள அம்மன் கோயில் முளைப்பாரி விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக அம்மனு கரகம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம் செல்வது வழக்கம். அந்த வகையில் அம்மன் கரகத்துடன் சென்ற பக்தர்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு வந்த போது, முஸ்லீம் ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதை தொடர்ந்து முளைப்பாரி சுமந்து சென்ற பெண்கள் கோயிலை மூன்று முறை வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். இதனையடுத்து கோயில் வாசல் முன் பெண்கள் பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டும் வழிபாடு நடத்தினர்.