தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் தெப்பத் திருவிழா

நெல்லை மாவட்டம் தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவிலில் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆவணி மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த தெப்பத் திருவிழாவில் காலை சுவாமி அம்பாள் கோயில் ரதவீதியில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலை சுவாமி அம்பாளுக்கு தெப்பக்குளத்தில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆகியவை நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து இரவு தெப்ப உற்சவம் தெப்பகுளத்தில் நடைபெற்றது. இதில் தென்காசி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தெப்பக்குள உற்சவத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் காவல்துறையும் பாதுகாப்பு ஏற்பாட்டை பலப்படுத்தி இருந்தனர்.

Exit mobile version