ஃபெரோஷா கோட்லா மைதானத்திற்கு அருண் ஜேட்லி பெயர்

டெல்லியில் உள்ள ஃபெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்திற்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அருண் ஜேட்லி 14 ஆண்டுகள் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பதவி வகித்துள்ளார். அவரை கவுரவிக்கும் விதமாக டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்திற்கு அருண் ஜேட்லி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான விழாவில் டெல்லியில் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு, அருண் ஜேட்லியின் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார். அதைத்தொடர்ந்து மைதானத்திற்கு அருண் ஜேட்லி பெயரை அமித் ஷா சூட்டினார். ஃபெரோஷா கோட்லா மைதானத்தின் ஒரு கேலரிக்கு விராட் கோலியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நடந்த கண்கவர் கலைநிகழ்ச்சி கண்போரை வெகுவாக கவர்ந்தது.

Exit mobile version