கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர், கர்ப்பிணிப் பெண்ணை எட்டி உதைத்ததாக, அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாலீஸ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் சின்னப்பன்ராஜ் என்பவர், துணை ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அபூர்சாமி என்பவருடன் ஏற்பட்ட நிலப் பிரச்சினை காரணமாக, பாண்டியன் சின்னப்பன்ராஜின் தாயார் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி, பாண்டியன் சின்னப்பன்ராஜ் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி ஆரோக்கிய அச்சிலியிடம் தரக்குறைவாக பேசியதோடு, கர்ப்பிணியான அவரை எட்டி உதைத்ததாகக் புகார் தெரிவித்துள்ளார்.
இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, குறை பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாண்டியன் சின்னப்பராஜ் வலியுறுத்தியுள்ளார்.