சென்னை நொளம்பூரில் கைகள் கட்டப்பட்டு பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆந்திராவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நொளம்பூர் சர்வீஸ் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள முட்புதரில் கைகள் கட்டப்பட்டு, பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் கிடந்தது.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அந்த பெண், ஆலப்பாக்கத்தை சேர்ந்த ரேவதி என்பதும், மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றியதும் தெரியவந்தது.
தெலங்கானாவைச் சேர்ந்த திம்மப்பா என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், ரேவதி அணிந்திருந்த 5 சவரன் தங்க செயின் அடகு வைத்துவிட்டு திம்மப்பா ஊர் சுற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.
அடமானம் வைத்த தங்க செயினை மீட்டுத் தருமாறு திம்மப்பாவிடம் கேட்டதால், அவர் ரேவதியை கொலை செய்து புதரில் வைத்து எரித்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் திம்மப்பா மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.