ஐதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெண் கால்நடை மருத்துவரின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஐதராபாத்தில் உள்ள சம்ஷா பாத் நரசய்யாபள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் விஜயம்மா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களில் பிரியங்கா கால்நடை மருத்துவராகவும், பவ்யா விமானநிலைய ஊழியராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பிய பிரியங்கா அன்று மாலை கால்நடை ஒன்றுக்கு அவசரமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வீட்டில் கூறிவிட்டு தனது மொபட்டில் புறப்பட்டு சென்றார். இரவு 9 மணி வரை பிரியங்கா வீடு விரும்பவில்லை. சற்று நேரத்தில் தன்னுடைய தங்கை பவ்யாவுக்கு போன் செய்த பிரியங்கா, மொபட் கீழே விழுந்து ரிப்பேர் ஆகிவிட்டது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாரி டிரைவர்களை தவிர யாரையும் காணவில்லை. அவர்கள் வண்டியை பழுது பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் அவர்கள் என்னைப் பார்க்கும் பார்வை சரியாக இல்லை. எனக்கு பயமாக இருக்கிறது. என்று கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்திருக்கிறார் அப்போது மணி இரவு 9.22 pm.
சரியாக இரவு 9.44pm மணிக்கு ப்ரியங்காவின் போன் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கிறது. இதனால் பயந்து போன அவரது குடும்பத்தினர். இதனால் பயந்து போன அவரது குடும்பத்தினர். உடனே மாதாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். டாக்டர் பிரியங்காவை காவல்துறையினரும் குடும்பத்தினரும் அன்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் 2 நாட்களுக்கு முன்பு காலை 8 மணி அளவில் ரங்காரெட்டியில் உள்ள மேம்பாலம் ஒன்றின் கீழ் இளம்பெண் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கிடக்கிறது என்று சாய் நகர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் பிரியங்கா குடும்பத்தாரை வரவழைத்து அந்த உடலை காண்பித்தனர். பிரியங்கா குடும்பத்தார் அது பிரியங்கா என்று உறுதி செய்தனர். எனவே பிரியங்காவை யாரோ உயிருடனோ அல்லது கொலை செய்து எரித்து விட்டதாக வழக்குப்பதிவு செய்த சாய் நகர் காவல்துறையினர் , அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகள், பிரியங்காவின் செல்போனில் இருந்து சென்ற அழைப்புகள், அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் 10 தனிப்படைகளை அமைத்து கொலை செய்தவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் அனந்தப்பூர் பகுதியில் இருக்கும் லாரி ஓட்டுநர் மற்றும் ஒரு கிளீனரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.