சமயபுரம் அருகே 10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள காருண்யா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். கேரளாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த கண்மணி என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், திருமணம் செய்ய மறுத்ததோடு பேசுவதையும் நிறுத்தியுள்ளார். இதையடுத்து, காதலித்து தன்னை ஏமாற்றிய காதலன் வெங்டேஷ் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என லால்குடி காவல் நிலையம் முன்பு பாதிக்கப்பட்ட கண்மணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.