கள்ளக்குறிச்சி மாவட்டம் தோற்றுவித்தல் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக சமீபத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் தமிழக கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் சத்தியகோபால் கலந்துக்கொண்டு மக்களின் கருத்துகளை கேட்டறிந்தார். இதில் பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், விவசாயிகள் கலந்துக்கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர், திருக்கோவிலூர், முகையூர் உள்ளிட்ட பகுதிகளை விழுப்புரத்துடன் இணைக்க வேண்டும் என பலர் கருத்துக்களை தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்ததற்கு தமிழக அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.