அமெரிக்க ஓபன் டென்னிசில் ஃபெடரருக்கு அதிர்ச்சியளித்த இந்திய வீரர்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர் சுமித் நாகலை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

டென்னிஸ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவிலிருந்து முதல் முறையாக அமெரிக்க ஓபனுக்கு தகுதி பெற்ற சுமித் நாகல், ஸ்விட்சர்லாந்தை சேர்ந்தவரும் டென்னிஸ் தரவரிசையில் 3 ஆம் நிலை வீரரான ரோஜர் ஃபெடரரை எதிர்கொண்டார். 2 மணி நேரம் 29 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் சுமித் நாகல் 6 க்கு 4 என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி ஆச்சர்யபட வைத்தார். இதன்பிறகு சுதாரித்துக் கொண்ட ஃபெடரர் 6 க்கு 1, 6 க்கு 2, 6க்கு 4 என்ற புள்ளிக் கணக்கில் அடுத்த 3 செட்களை கைப்பற்றி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

Exit mobile version