மத்திய அரசு ஊழியர்கள் இன்று 2வது நாளாக போராட்டம்

மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 2வது நாளாக, மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் நேற்று, நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று 2வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில், ஐ.என்.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன. குறிப்பாக வங்கி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர்.

மேலும், மத்திய அரசின் தபால் அலுவலகங்கள், ஜிஎஸ்டி ஊழியர் சங்கங்கள், இன்சூரன்ஸ் தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், பல்வேறு மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Exit mobile version