மத்திய இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்ட அறிவிப்புகள் வெறும் ட்ரைலர் மட்டுமே என்று கூறியுள்ள பிரதமர் மோடி, தேர்தலுக்கு பின்னர் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வோம் என்றும் தெரிவித்துள்ளார். பட்ஜெட் குறித்து உரைநிகழ்த்திய பிரதமர் மோடி, நடுத்தர மக்கள், உழைப்பாளர்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரின் நலனும் பட்ஜெட்டில் எடுத்துகொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமது அரசு நிறைவேற்றியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், இந்த இடைக்கால பட்ஜெட் வெறும் ட்ரைலர் மட்டுமே என்று கூறியுள்ள அவர், தேர்தலுக்கு பின்னர் வளர்ச்சி பாதையில் இந்தியாவை அழைத்துச் செல்வோம் என உறுதி தெரிவித்தார்.