அடடா! "Facebook"-ல் இப்படி ஒரு வசதியா?

உலகில் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அதிகரித்துக்கொண்டு வருகிறார்கள். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் புதிதாக டேட்டிங் செய்பவர்களுக்காக புதிதாக பக்கத்தை விரைவில் வெளியிட உள்ளதாக பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்

பேஸ்புக் F8 டெவலப்பர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் இந்த புதிய சேவைக்குறித்து விளக்கம் அளித்தார். இந்த டேட்டிங் சேவையை ஏற்கனவே பேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் பயன்படுத்த முடியாது. புதிதாக நட்பு வட்டத்தில் இணைபவர்கள் டேட்டிங் செய்வதற்கு புதிய பக்கத்தை உருவாக்கி அதன் மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த டேட்டிங் பக்கத்தில் மற்றவர்கள் நண்பர்களின் பட்டியலை காணமுடியாது. பேஸ்புக் தகவல்களை மற்றவர்கள் எடுத்து தவறாக சித்தரிப்பதை தடுத்து இந்த புதிய சேவையில் தகவல்களை பாதுகாக்க சிறப்பு கட்டமைப்புகளை பேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வருகிறது.

பேஸ்புக் பயன்படுத்தி புதிய நண்பர்கள் கிடைத்தனர். இப்போது டேட்டிங் செய்ய நடவடிக்கை எடுக்குறாங்க… அடுத்தது என்ன கல்யாணமா?

Exit mobile version