பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழிப்பதற்கு மிராஜ்–2000 ரக விமானங்களை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது. இந்த தாக்குதலுக்கு 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. அதிநவீன வசதிகளை கொண்ட நான்காம் தலைமுறையின் விமானமான மிராஜ் 2000 ரக விமானங்கள் மூலம், ஏவுகணைகளை ஏவ முடியும் என்றும் லேசர் வழிகாட்டும் குண்டுகளையும் வீசமுடியும். இந்த ரக விமானங்கள், தாக்குதல் இலக்கை மிகத் துல்லியமாக சென்று அழிக்கும் வல்லமை படைத்தவை என்றும், நீண்ட தூர இலக்கை குறிவைப்பதிலும் இந்த ‘மிராஜ்–2000’ ரக விமானங்கள் நிபுணத்துவம் பெற்றவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
48 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் எல்லை தாண்டிச்சென்று தாக்குதல் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.